உள்துறை செயலாளருடன் லியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் சந்திப்பு

ll

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிடப்பட்டது. அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தயாரிப்புநிறுவனவழக்கறிஞர்கள், சென்னையில் உள்ள உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்திற்கு காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு 'செவன் ஸ்க்ரீன்' படநிறுவன வழக்கறிஞர்கள் வேலூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்துள்ளனர்.

theater TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe