/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pothai1.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தீவிர முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மூடப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் போதைக்காக வார்னிஷை குடித்த பெயிண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கத்தில் பெயிண்டராக இருப்பவர் சங்கர். இவர் போதைக்காக வார்னிஷில் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து, தனது நண்பர்களான சிவசங்கர், கிருஷ்ணன் ஆகியோருடன் குடித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சங்கர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து இதனைக் குடித்த சிவசங்கர், கிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களோடு இதனைக் குடித்த மற்றொரு நபரை போலீஸார் தேடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், போதைக்காக வார்னிஷ் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)