அலுவலகங்கள் முதல் சுடுகாடு வரை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்!

நேற்று (29-7-2021) காலை அரியலூர் மாவட்டம்ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில், பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், முதியோர் இல்லம், குப்பைக் கிடங்கு, தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, நியாய விலைக் கடை, ஏரிகள், சுடுகாடு, பேரூந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவருடன் ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன்,பேரூராட்சி செயல் அலுவலர் ச.உஷா, இளநிலைப் பொறியாளர் சுப்பிரமணியன், டாக்டர்.சுகுணா, தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் அருட்தந்தை, தலைமை ஆசிரியர், முதியோர் இல்ல சிஸ்டர் லில்லி ரோஸ், பேரூர் செயலாளர் அல்போன்ஸ், பேரூர் முன்னாள் தலைவர் அந்தோனிசாமி, பேரூர் முன்னாள் செயலாளர் எட்வர்ட், தகவல் தொழில்நுட்ப அணி அருள் விஜய் ரொசாரியோ மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

andimadam Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe