
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று (10.05.2021) திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட இருக்கும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் ஆயத்த பணிகள் குறித்து விவாதித்து, மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.
Follow Us