The legislator met in person and handed over the relief amount

கள்ளக்குறிச்சி அருகே முடியனூர் கிராமத்தில் கருப்பன் மனைவி பாப்பாத்தி வசித்து வருகிறார். திடீரென்று ஏற்பட்டதீவிபத்தால்வீடு முழுவதும் சேதமடைந்தநிலையில் தங்குவதற்கு இடமின்றி தவித்த பாப்பாத்தியை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு. மேலும்,அரசின்நிவாரணத் தொகை,எம்.எல்.ஏ. நிதியுதவி, ஒன்றியச் செயலாளர் நிதியுதவி, அரிசி, வேஷ்டி சேலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் வழங்கினார். அதேபோல்,பிரதமரின்வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள பணி ஆணையையும் வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியின்போது கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,நாகலூர் குறுவட்ட ஆய்வாளர் தங்கவேல்,கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisment