நேற்று (10-12-2021) மாலை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சிங்கராயபுரம் கிராமத்தில் தமிழ்நாடுமுதல்வரின் ஆணைப்படி, குறைந்த மின் அழுத்தத்தினை சரிசெய்யும் விதமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ரூ.6.21 லட்சம் மதிப்பீட்டில், 63/11 KVA புதிய மின் மாற்றியினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், உதவி பொறியாளர் தா.பழூர் இளையராஜா, உதவி பொறியாளர் சுத்தமல்லி ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் அடைக்கலமேரி ராபர்ட், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சி. கண்ணதாசன், கிளை கழகச் செயலாளர்கள் அப்ரகாம், ஆர். இளமதி மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் கலந்துகொண்டனர்.