Advertisment

பொதுத்தேர்வா? பொதுத்தேர்தலா? - தகவல்களால் குழப்பம்

Legislative election before12 exam?

Advertisment

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணிஎனகளத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனையைஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையம்கடந்த11.02.2021அன்று2-வது நாளாக சென்னையில் நடத்தியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராபங்குபெற்றார்.

Advertisment

இதனையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரிஇறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் நேற்று (16.02.2021) வெளியாகியிருந்தது.மேலும் ஏப்ரல்இறுதி வாரத்தில் ஒரே கட்டமாகதேர்தல் நடத்தப்படும் எனவும், மே10 ஆம் தேதிக்குமேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்எனவும்தகவல்கள் வெளியாகியிருந்தன.

Legislative election before12 exam?

இந்நிலையில்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே3 ஆம் தேதிதொடங்கி மே21 ஆம் தேதி வரை நடைபெறும் எனஅரசு தேர்வுகள்இயக்குனர் சார்பில்இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 93 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில்பெரும்பாலும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளே வாக்குச்சாவடிகளாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' ஆகவும் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மே3 ஆம் தேதிதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று குழப்பதை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள மே 3ஆம் தேதிக்கும் முன்னரேசட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பொதுத்தேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை எனதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

+2 exams 12th result Election Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe