Skip to main content

பொதுத்தேர்வா? பொதுத்தேர்தலா? - தகவல்களால் குழப்பம்

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Legislative election before12 exam?

 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணி என களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 11.02.2021 அன்று 2-வது நாளாக சென்னையில் நடத்தியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்குபெற்றார்.

 

இதனையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் நேற்று (16.02.2021) வெளியாகியிருந்தது. மேலும் ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், மே 10 ஆம் தேதிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

 

Legislative election before12 exam?

 

இந்நிலையில்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குனர் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 93 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் பெரும்பாலும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளே வாக்குச்சாவடிகளாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' ஆகவும் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மே 3 ஆம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று குழப்பதை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள மே 3 ஆம் தேதிக்கும் முன்னரே சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

அதேபோல் பொதுத்தேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.