Advertisment

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநாடு பயணம்

Legislative Assembly Speaker appavu Travels Abroad

Advertisment

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி முதல் 05 வரை66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்து கொள்கின்றார். இவருடன் சட்டமன்றச் செயலாளர் கி. சீனிவாசன் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராகக் கலந்து கொள்கின்றார். மேலும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் பத்ம குமாரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் இன்று (26.09.2023) காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்துமற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். அதே சமயம் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 காலை 08.25 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.

முன்னதாகத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதையொட்டி நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

APPAVU Conference Meeting
இதையும் படியுங்கள்
Subscribe