குப்பை தொட்டியில் கிடந்த இடது கை... துடியலூரில் பரபரப்பு!

The left hand lying in the dustbin... a stir in Dudiyalur!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு என்ற பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் இடது கை ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள விஎஸ்.கே நகர் பகுதியில் இன்றுகாலைவாகனத்தின் மூலம் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் குப்பையில் மனிதனின் கை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் மற்ற உடல் பாகங்கள் இதேபோல் அருகில் உள்ள குப்பைமேடுகளில்வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை கொண்டுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

incident kovai police
இதையும் படியுங்கள்
Subscribe