Advertisment

ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வு (படங்கள்) 

Advertisment

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்த திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான கோயில் நிலங்களை மீட்டெடுத்தார். அந்தவகையில், சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்டெடுக்கப்பட்டு, அங்கு கல்லூரி துவங்கப்படுமெனும் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அக்கல்லூரிக்கான விரிவுரையாளர்கள் தேர்வுகுறித்தான அறிவிப்பு வெளியானது. அதில், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.ஸி, பி.எஸ்.ஸி கணினி அறிவியல், பி.சி.ஏ, தமிழ், ஆங்கிலம், கணிதம் படிப்புகள் கற்பிக்க உதவி பேராசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்கான நேர்காணல் அக். 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (18.10.2021) விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

college
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe