ஒடுக்கப்பட்டோர்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைசட்டத்தின் கீழ், கடந்த மே 23-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் இருந்துகடுகளவும் பின்வாங்க மாட்டோம்.எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்.பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டுவிட்டு கரோனாவைஒழிப்பதில் அரசுகவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.