Skip to main content

59 நாட்களுக்கு அனைவரும் லீவு! -இந்து அறநிலைத்துறை அதிகாரிகளின் ‘மாஸ்’ ப்ளான்!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
leave

 

 

 

கோயில்களை காக்கவேண்டிய இந்து அறநிலைத்துறை அதிகாரிகளே சிலைக்கடத்தலிலும் மோசடிகளிலும் சிக்கிக்கொண்டிருப்பது குறித்து நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

நக்கீரன் வெளியிட்ட ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் கூடுதல் கமிஷனர்(திருப்பணி)கவிதா அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிப்பதற்கு பதிலாக…சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

“ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் அதிரடி விசாரணையை வைத்தே இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோயில்களை அந்தந்த நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான வேலையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.வினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நக்கீரன் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டால் மத்திய பா.ஜ.க. அரசின் கீழுள்ள சி.பி.ஐ.-ஐ வைத்தே தனது அஜெண்டாவை முடித்துவிடுவார்கள்” என்ற கருத்தும் நிலவி வருகிறது.

 

 

 

இந்நிலையில், உயரதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இனி யாரையும் கைதுசெய்துவிடக்கூடாது என்பதாலும் அவசர ஆலோசனைக்கூட்டம் இந்து அறநிலைத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து அறநிலைத்துறையின் திருச்சி இணை ஆணையர் ஜெயராமன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரில் ஆரம்பித்து ஏ.சி., டி.சி., என அனைவரும் 59 நாட்கள், 58 நாட்கள் லீவு போடுவோம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. 60 நாட்கள் லீவு போட்டால் மெடிக்கல் போர்டில் அதற்கான காரணத்தைச்சொல்லவேண்டும் என்பதால் இப்படி, விடுமுறை போட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை செய்ய ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் கனமழை; 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain; Public holiday notification for 4 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று (18-12-23) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு  அறிவித்துள்ளது.

Next Story

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? வெளியான அறிவிப்பு!

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Holiday notification only for schools in 3 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கெனவே, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18-12-23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.