cut out

கடலூர் சாவடியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு அனைத்து கடைகளையும் மூடி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் பத்து கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை கடைகளில் திருடியுள்ளனர்.

Advertisment

மோகன் என்பவரின் சிமிட்டி கடை பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடினர். அதேபோல் அருகிலிருந்த அரிசி கடையில் 5 ஆயிரம், லேப்பில் ரூ 6300ம், கவரிங் பேன்சி கடையில் 6 ஆயிரம் என திருடியுள்ளனர். மேலும் ஜெராக்ஸ் கடை, மாட்டுத்தீவண கடை, கூல்ட்ரிங்ஸ் கடை ஆகியவைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து கடலூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே சமயத்தில் பத்து கடைகளில் திருடுபோனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.