'At least the Tamil Nadu government should give this to the people'-BJP Annamalai review

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'ராகுல் காந்தி நடத்தும் நடைப்பயணம் என்பது நடைப்பயணம் என்பதைத்தாண்டி அது ஒரு எண்டர்டைன்மென்ட். இந்தநடைப்பயணத்தினுடைய ரிசல்ட்டை நாம் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளிலும் பார்க்கிறோம். இந்திய ஒற்றுமை யாத்திரை என்று சொல்கிறார். ஆனால் இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்துக்கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் கடுமையாக ஓடுவது, நடப்பது அவருக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடன் சென்ற காங்கிரஸ்காரர்களும் நன்றாக ஃபிட் ஆகியிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு இதில் எந்தப் பயனும் இல்லை.

Advertisment

நம்முடைய மத்திய அரசு 2023 டிசம்பர் வரைக்கும் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை மறுபடியும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து நீட்டித்திருக்கிறார்கள். ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நடந்து கொண்டிருந்தது. அதை 2023 டிசம்பர் வரை நீட்டித்துள்ளார்கள். உலகில் எந்த ஒரு நாடும் செய்யாததை பிரதமர் மோடி செய்துள்ளார். கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். இதையாவது தமிழக அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள்.

போன முறை பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுத்தீர்கள். இந்த முறை கரும்பு இடம் பெறவில்லை. பனை வெல்லத்தைக் கொடுப்போம் எனத்தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இந்நேரம் பனை வெல்லம் உற்பத்தி ஆரம்பித்து இருந்தால் இதனால் விவசாயிகளும் பயன்பெற்று இருப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்பொழுது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் அறிவித்துள்ளீர்கள். எனவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு'' என்றார்.

Advertisment