'Leasing of Halls to Private'-Chennai Corporation Resolution

Advertisment

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மொத்தமாக இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஒன்பது கால்பந்து விளையாட்டு மைதானங்கள் தனியாருக்கு வாடகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய அம்மா மாளிகை, தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் உள்ளிட்ட அரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட இருக்கிறது. போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல்சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் இன்று டேப் வழங்கப்பட உள்ளது.