மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, கலைஞரின் மக்கள் தொடர்பு அலுவலர் மருதநாயகம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.