தமிழ்நாடு முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. மதுரை, திருச்சி போன்ற முக்கிய இடங்களில் உள்ள அவரது சிலைக்கு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் நந்தனத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment