Advertisment

நடிகர் ரஜினிகாந்திற்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Leaders including Modi congratulate actor Rajinikanth!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும்பல்வேறு மாவட்டங்களில் விதவிதமாக பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

Leaders including Modi congratulate actor Rajinikanth!

பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ''அற்புதமான நடிப்பால் மக்களை நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ரஜினிகாந்த் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ''நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ''நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

birthday modi ops_eps rajinjikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe