சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

jlk

தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று மதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் இன்று மருத்துவமனையிலேயே காலமானார்.

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும்,தரைவழி போக்குவரத்து துறை மத்திய அமைச்சராகவும் இருந்தார். இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர.என் ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,சேடப்பட்டி முத்தையா மறைவு தமிழ்நாட்டுக்கு பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

governor
இதையும் படியுங்கள்
Subscribe