Skip to main content

தலைவர்கள் பெயர் மறைப்பு; அமலுக்கு வந்த தேர்தல் கட்டுப்பாடு

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

Leaders are anonymous; Electoral regulation enacted

 

இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. அதனோடு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கு வரும் பிப். 27ம் தேதி தேர்தல் என்றும் மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளதால் ஈரோடு கிழக்கில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவர்களின் பெயர்கள், கல்வெட்டுகளில் உள்ள பெயர்களை மறைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31 ஆம் தேதி துவங்க இருக்கிறது . இதனால் தற்போதே  தேர்தல் நடத்தை விதிகள் அங்கு அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விவிபேட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் தேர்தல் ஆணைய அலுவலகம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இயந்திரங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

 

சார்ந்த செய்திகள்