சென்னையில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

Leader of illegal organization arrested in Chennai

சென்னையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலை தேசியப்புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா என மாறி மாறி தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சையது நபில், நேபாளம் தப்ப முயன்றபோது என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதையடுத்து ஐ.எஸ் அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது போன்றவை தெரிய வந்துள்ளது.

Chennai NIA
இதையும் படியுங்கள்
Subscribe