Lawyers from Tamil Nadu left to participate in the Delhi  struggle

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதே போல தமிழ்நாட்டில் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ஜெஏஏசி அறிவித்துள்ள ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி இந்தியா முழுவதும் இருந்து வழக்கறிஞர்கள் எதிர் வரும் 29 ஆம்தேதி டெல்லியில் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisment

போராட்டத்தில் பங்கேற்க ஏராளமான வழக்கறிஞர்கள் விமானம் மற்றும் ரயில்களில் செல்கின்றனர். அதே போல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.