Advertisment

மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

madurai

Advertisment

குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டு வருவதை நிறுத்திட கோரிவழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ரன்பீர் சிங் தலைமையில் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டும்,கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேற்படி 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டு வருவதை நிறுத்திட கோரியும்,

நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்தியும்,மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சட்டமே தெரியாத ஒருவரை இதன் தலைவராக நியமித்துள்ளது, இந்த சட்ட திருத்தங்கள் வந்தால் சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலைய கொலை போல தமிழகம் முழுவதும் இனி நடக்கும். எனவே இந்த 5 பேர் கொண்ட குழுவினை உடனடியாக கலைத்திட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.

lawyers madurai struggle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe