Lawyers -protest- on court- premises

Advertisment

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு முடிவின்படி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சார்பில் இன்று (22.09.2020) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு வழக்கறிஞர்கள் அசோசியேஷன் தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், "வழக்கறிஞர்கள் மீது காவல்துறைவழக்குப் பதிவு செய்தாலே, பார் கவுன்சிலில் இருந்து நீக்கி விடுகின்றனர். ஆகையால்,வழக்கறிஞர்களிடம்உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே, இனி பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்நது, வழக்கறிஞர்கள் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.