Advertisment

செண்பகராமன் பிள்ளை வீரத்தை நினைவு கூறும் விதமாக அஞ்சலி செலுத்திய வழக்கறிஞர்கள்! (படங்கள்)

Advertisment

1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை எம்டன் போர் கப்பல் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு நேர் எதிரே உள்ள கடற்கரையில் இருந்து ஆங்கிலேயரின் கோட்டை மீது பீரங்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.

அந்த குண்டு வந்து விழுந்த இடமான உயர்நீதிமன்ற நீதிபதிகள் நுழைவாயிலில் கல்வெட்டு வைக்கப்பட்டு ஆண்டு தோறும் அவரின் வீரத்தை நினைவு கூரும் விதமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் வழக்கறிஞர்கள். இதே போல் இன்று அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக குண்டு விழுந்த இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் பால்கனகராஜ் மற்றும் செண்பகராமன் பிள்ளை குடும்ப வாரிசுகள் கலந்துகொண்டனர்.

Chennai Advocates tribute Shenbakaraman Pillai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe