வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்திற்கு நீட் விலக்கிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது மற்றும் விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் உள்ள பல கட்சியினர்களும் மத்திய அரசைக் கண்டித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/advt-prtst-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/advt-prtst-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/advt-prtst-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/advt-prtst-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/advt-prtst-1.jpg)