Advertisment

"தனிமாவட்டமாக அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்" - வழக்கறிஞர் கூட்டமைப்பு

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் புறக்கணிக்க முன்வரவேண்டும், என்று வக்கீல்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ராமசேயோன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துவருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செங்கல்பட்டு உள்ளிட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கியபோது, மயிலாடுதுறையில் போராட்டம் வலுப்பெற்றது.

இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்காவிட்டால் மயிலாடுதுறை கோட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் தேர்தலை புறக்கணிப்போம், புறக்கணிக்க வேண்டும்," என்றனர்.

இதற்கு இடையில் நாகை மாவட்டத்தில் புதிதாக வரப்போகும் மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று போராட்டமாக மாறி வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கபோவது உறுதி. மேலும், மருத்துவக்கல்லூரி மாவட்ட தலை நகரத்தில் தான் அமைக்க முடியும். மயிலாடுதுறை முதலில் மாவட்டம் ஆகட்டும் மருத்துவக்கல்லூரி தானாக அமையும் என்று கூறினார்.

lawyers association wants to boycott local body election

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர்ராமசேயோன் கூறுகையில், "தமிழகத்தில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே மயிலாடுதுறையை அதிமுக அரசு பார்த்து வருகிறது.இது வேதனையின் உச்சம். இங்கு புதியபேருந்து நிலையம் இல்லை, பாதாளசாக்கடை குளறுபடியாகிவிட்டது, மயிலாடுதுறை நகராட்சி முழுமையாக முடங்கி கோமா நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் மயிலாடுதுறையை விட பலமடங்கு குறைவான பல மாவட்டங்களை புதிதாக உருவாக்கியிருக்கிறது. நீண்ட நாள் கோரிக்கை, பாரம்பரியமும், பண்பாடும் கொண்ட மயிலாடுதுறையை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை, திருவாடுதுறை, தருமபுரம் உள்ளிட்ட பிரதான ஆதீனங்களும் வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, மயூரநாதர் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களும் மயிலாடுதுறை பகுதியில் தான் இருக்கிறது.

ஆனாலும் மாவட்டமாக அறிவிக்க ஏன் தயக்கம் என்று புரியவில்லை. இந்தநிலையில் நாகை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரியும் நாகப்பட்டினத்திற்கே கொண்டு செல்வது வேதனையின் உச்சம். அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை மக்கள், அரசியல் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்" என்றார்.

local body election boycott lawyers Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe