Advertisment

டெல்லி போராட்டத்தில் தி.மு.க பதாகை!

 The lawyer who participated with the DMK banner in the Delhi struggle

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாயிகள், விவசாயச் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

 The lawyer who participated with the DMK banner in the Delhi struggle

இந்த நிலையில் டெல்லி போராட்டக் களத்திற்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் நேரில் சென்றுஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் டெல்டாவில் இருந்து கைஃபா அமைப்பின் சார்பில், இருவர் டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தநிலையில், தற்போது திருச்சி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், கனிமொழி எம்.பி. பேரவை அமைப்பாளருமான தங்க.கோபிநாத் தி.மு.க பதாகையுடன் டெல்லிக்குச் சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். மேலும் வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று விளக்கவுரையும் நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழக இளைஞர்கள் டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, தங்களதுஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Delhi farmer protest. lawyers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe