lawyer who gives love torture to a female judge

மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருக்கும் ஒருவருக்கு, வழக்கறிஞர் சிவராஜ் என்பவர் காதல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் நீதிபதி செல்லும் இடத்திற்கு எல்லாம் சிவராஜும் பின் தொடர்ந்து செல்வதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இல்லாவிட்டாலும் கூட பெண் நீதிபதியைப் பார்க்க சிவராஜ் நீதிமன்றத்திலே அமர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் நீதிபதியே வழக்கறிஞர் சிவராஜை அழைத்து எச்சரிக்கை செய்ததாகவும், ஆனால், அதன் பின்பும் சிவராஜ் நிறுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் பார் கவுன்சிலுக்கு புகார் அளித்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பெண் நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு அவதூறு மற்றும் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட செயல்களில் வழக்கறிஞர் சிவராஜ் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த புகார் மீதான விசாரணை முடியும் வரை சிவராஜ் வக்கில் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.