/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a211.jpg)
கோவையில் வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாநகர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 300 மீட்டர் தொலைவில் உள்ள வரத்தோப்பு என்ற இடத்தில் கோழிப்பண்ணை முன்பாக காரில் சென்று கொண்டிருந்த அவரைமர்ம நபர்கள் வழிமறித்து சிலர் தலை, தாடை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பித்து ஓடினர்.
சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் உதயகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான பிரச்சனை ஒன்றில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்த நபர்களில் ஒருவரை போலீசார் பிடித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)