கோவையில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

 lawyer arrested near kovai

கோவை பி.என். புதூரைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவரது மகன் சங்கரநாராயணன்(42). வழக்கறிஞரான இவர் கடந்த 2012-2017 வரை வெளிநாடுகளில் பணியாற்றி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் மகள் கனடாவில் விபத்தில் இறந்து விட்டதால் நாடு திரும்பிய இவர் அதன் பிறகு தனது சொந்த ஊரான பிஎன் புதூரில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் மகள் இறந்த சோகத்தில் இருந்த சங்கரநாராயணன், கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடம் நடத்திவருகிறார்.

Advertisment

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கரநாராயணன், 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் குடும்பத்தினர், கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆய்வாளர் முத்துமணி சங்கரநாராயணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.