Published on 07/08/2021 | Edited on 07/08/2021

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை, மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கமாலுதீன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில், நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கக் கூடிய சட்டக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ராமசந்திரன், இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் தப்ரேஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.