Advertisment

சட்டம் ஒழுங்கு குறித்து ஜூலை 11ல் முதல்வர் ஆலோசனை

law and order issue cm mk stalin discussion

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 12) நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை, தமிழகத்தில் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜீவால், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். சங்கர் ஜீவால் டிஜிபியாக பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

order law Meeting
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe