Advertisment

“எஸ்ஐ முதல் டிஜிபி வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும்” - சட்ட ஒழுங்கு டிஜிபி அறிவுறுத்தல்

 Law and order DGP instruction SI to DGP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர்.

Advertisment

இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும்.லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (SHO), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe