mk stalin

Advertisment

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஊட்டி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ’ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் பொருட்டு ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.