வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (27-02-24) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில்நக்கீரன் ஆசிரியர் தலைமை தாங்கினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி நூலினை வெளியிட்டு, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

book launch Thirumavalavan vanniarasu vck
இதையும் படியுங்கள்
Subscribe