ADVERTISEMENT

"துப்பறியும் வேலையை நீங்களே செய்துவிடுங்கள்... என்னால் முடியாது" - அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை!

05:18 PM Apr 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக மற்றும் முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 11 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இந்த மசோதாக்கள் தொடர்பாக எந்த முடிவையும் ஆளுநர் நீண்ட காலமாக எடுக்கவில்லை. இந்நிலையில் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்து இருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்புக்களுக்கு இடையே நேற்று முதல் மீண்டும் மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய செங்கம் அதிமுக எம்.எல்.ஏ கிரி, செங்கத்தில் சிப்காட் அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு தொழில்துறை அமைச்சர் தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றார். தொடர்ந்து பேசிய கிரி, " செங்கத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது, அதில் முன்பு மத்திய, மாநில அரசுகள் பண்ணை அமைத்தார்கள். தற்போது அந்த நிலம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதை கண்டுபிடித்து சிப்காட் அமைக்க வேண்டும்" என்றார்.


இதற்குப் பதிலளித்த அமைச்சர், " உறுப்பினர் நிலத்தைக் காட்டி இங்கு சிப்காட் அமைக்கப்படுமா என்று கேட்டால் பதில் கூற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிலத்தைக் கண்டுபிடித்து சிப்காட் அமையுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார். இருக்கிற வேலைப் பளுவில் என்னால் அந்த துப்பறியும் வேலையைச் செய்ய இயலாது. ஆகவே உறுப்பினரே நிலத்தை கண்டறிந்து சொன்னால் அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT