Advertisment

நளினி சிதம்பரத்துக்கு ஆறுதல் சொன்ன லதா ரஜினிகாந்த்.

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.சிதம்பரத்தின் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது கைது குறித்து இது வரை வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்ட லதா ரஜினிகாந்த், 'நடந்துள்ள சம்பவங்கள் வருத்தமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள். சட்டத்தின் துணையால் உங்கள் கணவர் விரைவில் விடுதலையாவார்' என சிதம்பரத்தின் தற்போதைய நிலைக்கு வருத்தப்பட்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.

Advertisment

Latha Rajinikanth consoled former union minister p chidambaram wife Nalini Chidambaram.

லதா ரஜினியின் இந்த ஆறுதல் பேச்சு அவரது உள்ளத்தில் இருந்து வந்தது என்றாலும், ரஜினி சொல்லியே நளினி சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார் லதா. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் குடும்ப தோழிகள். லதா ரஜினியின் வார்த்தைகள் நளினி சிதம்பரத்துக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது என்கிறார்கள் சிதம்பரம் தரப்பினர்.

Advertisment
FORMER UNION MINISTER latha rajinikanth Nalini Chidambaram P chidambaram Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe