Skip to main content

இரவு நேர தாம்பரம் - கடற்கரை ரயில்கள் ரத்து - ரயில்வே அறிவிப்பு

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

 Late night Tambaram-Coach trains cancellation-Railway Notification -Railway Notification

 

அண்மையில் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:59 மணிக்கு தாம்பரம் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அறிவிப்பின்படி அக்டோபர் 19, 20, 25, 26, 27, 28, 30, 31 மற்றும் நவம்பர் 1, 2, 3 ஆகிய நாட்களில் இரவு நேரத்தில் 11.59 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தாம்பரத்திலிருந்து இரவு 11:40க்கு சென்னை கடற்கரை புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19, 20, 25, 26, 27, 28, 30, 31 மற்றும் நவம்பர் 1, 2, 3 ஆகிய நாட்களில் இரவு 11:40க்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்