Advertisment

மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் உடல் நல்லடக்கம்... பொதுமக்கள், உறவினா்கள் கண்ணீா் அஞ்சலி!! (படங்கள்)

Advertisment

கன்னியாகுமாி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்குகரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 10-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் 28-ம் தேதி பாிதாபமாக உயிாிழந்தாா். இது காங்கிரசாா் மத்தியில் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த அவாின் உடலை சென்னை தியாகராயநகா் நடேசன் தெருவில் உள்ள அவாின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக காங்கிரஸ் தலைவா் அழகிாி உட்பட பலா் அஞ்சலி செலுத்தினாா்கள்.

இதனைத் தொடா்ந்து சென்னையில் இருந்து அவாின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமாி அகஸ்தீஸ்வரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. அவாின் உடலுக்கு இன்று காலையில் இருந்தே காங்கிரஸ், மற்றும் அனைத்து கட்சியை சோ்ந்தவா்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினாா்கள். இதில் திமுக எம்.எல்.ஏக்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பூங்கோதை ஆலடி அருணா, அனிதா ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமாா், பிாின்ஸ், கேரளா காங்கிரஸ் எம்.பி கொடிகுன்னில் சுரேஷ், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் முன்னாள் அமைச்சா் பச்சைமால் மற்றும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரா, ஆா்.டி.ஒ மயில் உட்பட ஏராளமான பொதுமக்களும் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினாா்கள்.

பின்னா் அவாின் உடல் குடும்ப தோட்டமான தோிவிளையில் வசந்தகுமாரின் தாய் தந்தை அடக்கம் செய்யப்பட்டியிருந்த இடத்தின் அருகில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. காங்கிரஸ் கொடியால் மூடப்பட்டியிருந்த அவாின் பூத உடலை காங்கிரஸ் தொண்டா்கள் தூக்கி சென்றனா். அதைத் தொடா்ந்து ஆயிரகணக்கான காங்கிரசார், மாற்று கட்சியினா், பொதுமக்கள் பின் தொடா்ந்து சென்றனா். பின்னா் 11.30 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது காங்கிரசாா் கண்ணீா் மல்க அழுதனா்.

h. vasanthakumar Kanyakumari passed away
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe