
சிக்கன் ரைஸ் தாமதமாகக் கொடுத்ததற்காக இருவர் கடையைச் சூறையாடிய சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியில் தீன் சிக்கன் சென்டர் என்ற அசைவ துரித உணவகம் ஒன்றில் நேற்று இரவு ஒருவர் உணவருந்தவந்தார். அப்பொழுது சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரகாத்திருப்புக்குப் பின்னும் சிக்கன் ரைஸ் தராததால் ஆத்திரமடைந்த அவர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்றுவிட்டார். பின்னர் நண்பர்களை அழைத்து வந்த அந்த நபர் ஹோட்டலை சூறையாடினார். கடையிலிருந்த அடுப்பு, எண்ணெய் மற்றும் சமைக்கப்பட்ட உணவு பொருட்களை கீழே தள்ளிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம்பதற்றம் நிலவியது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிசி காட்சிகளை ஆய்வு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us