Advertisment

போன வாரம் ஈ; இன்று பல்லி; தொடரும் ஆவின் சர்ச்சை

Last week E; Lizard today; Controversy continues

Advertisment

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் ஆவின்பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. சிலதினங்களுக்குமுன் மதுரையில் விற்கப்பட்ட ஆவின் பால் பக்கெட்டில் ஈ இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையவைத்தது. பால் பேக்கிங் செய்த பொழுது தவறுதலாக நடந்துவிட்டது என அதிகாரிகளால் சொல்லப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் விற்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி மிதந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் அதை வீடியோ காட்சியாகவும் பதிவு செய்து கொண்டார்.

Advertisment

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் மதுரையில் பால் பாக்கெட்டில் ஈ இருந்த சம்பவத்தில் மதுரை ஆவின் உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பேக்கிங் செய்ய பைகளை வழங்கும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆவின் பால் பாக்கெட்டில் பல்லி இருந்தது ஆவின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe