In the last breath “Anna… Anna…” - Chief Minister mk stalin

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் அண்ணா பிறந்தநாள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார்.

Advertisment

அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!' என தெரிவித்துள்ளார்.

Advertisment