In the last 15 hours, 4 people were loss their live in a train collision

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ரயில் மோதி உயிரிழந்ததைத்தொடர்ந்து சென்னையில் மட்டும் கடந்த 15 மணி நேரத்தில் இதேபோல் ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்ததாக ரயில்வே போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Advertisment

கோடம்பாக்கம் அடுத்துள்ள ரங்கராஜன் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சிக்கி உயிரிழந்தார். 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அந்த இளைஞர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நேற்று இரவு எண்ணூர் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வடமாநில இளைஞர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க வந்த 50 வயது கொண்ட இரண்டு பேர் அதே தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்தது மேலும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக கடந்த 15 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் நான்கு பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment