Advertisment

பிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி!

கடந்த முறை திருச்சியில் தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த முறை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்காக வழக்கு தொடுத்தனர்.

Advertisment

ஆரம்பத்தில் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில் 3000 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று திருச்சி மாநகர செயலாளர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எம்ஜிஆர் நசிலையிலிருந்து உழவர் சந்தைக்கு பேரணியாக செல்வது என அனுமதி கொடுக்கப்பட்டது.

Advertisment

ஆனால் திருச்சி உளவுத்துறை போலீஸோ லட்சக்கணக்கில் திரளுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூலு தகவல் கொடுத்ததால் அவர் நீதிமன்றம் மூலம் வாங்கின அனுமதி இடத்தை மறுத்து இரவோடு இரவாக திருச்சியின் புறநகர் பகுதியில் சில இடங்களில் காண்பித்தார்.

கடைசியில் திருச்சி மதுரை பழைய பைபாஸ் சாலையில் பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.கடைசி நேரத்தில் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலுக்குட்படாத வகையில் விடுதலைச்சிறுத்தைகளின் பேரணியில்‌ பாதை மாற்றம் செய்யப்பட்டது.

பேரணி திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் என்னும் இடத்தில் வலதுபுறமாக பிரியும் பழைய மதுரை சாலையில் ஆர் சி நகர் கூட்டுச் சாலையில் இருந்து பேரணி புறப்பட்டது.ரயில்வே பாதையை கடக்கும் மேம்பாலத்தின் வழியாக பேரணி காவல்துறை குடியிருப்பு வரை சென்றது.

ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற்றது.ஆர் சி நகர் கூட்டு சாலை எடமலைப்பட்டி புதூர் பகுதியாகும். அங்கே கிறிஸ்தவ பள்ளியில் இருந்து தான் பேரணி துவங்கியது. 3.30 மணிக்கு புறப்பட்ட பேரணி 6.00 மணிக்கு முடியும் இடத்திற்கு வந்தது.

பேரணி முழுவதும் திருமாவளவன் திறந்த வேனில் மேலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே வந்தார்.

பேரணியில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பேரணியில் பேசிய திருமாவளவன்,

இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும். இரண்டு மாதங்களாக முஸ்லிம்கள் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற மாயையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் லட்சக்கணக்கில் இந்த சட்டத்திற்கு எதிராக கோஷம் போட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால் நாங்கள் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் பிள்ளைகள். பதவி வெறி பிடித்தவர்களாய் இருந்திருந்தால் மோடியின் காலடியிலும் எடப்பாடியின் காலடியில் கிடந்து இருப்போம்.பாஜக தேர்தல் கட்சி அல்ல அதை பின்னால் இயக்குவது ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கம். அந்த இயக்கம்தான்காந்தியடிகளை சுட்டுக் கொண்டு இயக்கம்.

3,000 கோடி செலவு செய்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தடை சொன்ன இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்.கோமணம் கட்டி இருக்க வேண்டிய திருமாவளவன் நெஞ்சை நிமிர்த்தி மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். காரணம் அரசியலமைப்பு சட்டம் வகுத்த அம்பேத்கர்.

ஆர்எஸ்எஸ்க்கு உண்மையில் யார் மீது வெறுப்பு என்றால் முஸ்லிம் மீது அல்ல, கிறிஸ்தவர்கள் மீது அல்ல, நம் மீது அல்ல, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால் நாம் யாரும் இதில் நடமாட முடியாது. என்றார்.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து அலை அடிப்பது போல் லட்சக்கணக்கில் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி நடந்து வந்த திருச்சியின் பழைய மதுரை சாலையில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி இருந்ததால் அந்த சாலைக்கு விடுதலை சிறுத்தை சாலை என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

rally thiruchy vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe