Skip to main content

நிலக்கரியில் மாபெரும் ஊழல்.. அறப்போர் இயக்கம் வெளியிடப் போகும் புள்ளி விபர பட்டியல்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
arappor iyakkam

 

அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்ல்... "இந்தியாவிற்குள்ளிருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு கொண்டு வரக்கூடிய நிலக்கரியில் நடந்த ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வர இருக்கிறோம். ஏற்கனவே அறப்போர் இயக்கம் நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். நிலக்கரி தட்டுப்பாடு இருக்கும் இந்த சமயத்தில் உள்ளூர் நிலக்கரி போக்குவரத்தில்  எப்படி ஆயிரக்கணக்கான கோடி இழப்பு மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ளது முழுமையான ஊழல்பட்டியலை எங்கள் இயக்கம் நாளை காலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி புள்ளி விபரத்துடன் வெளியிட  உள்ளோம்." என கூறியிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சமோசாவில் கருத்தடை சாதனம்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Shocking information that came out on A contraceptive device in a samosa;t!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் பிம்பரி - சின்ச்வாட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் சமோசா மிகவும் பிரசித்தி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (08-04-24) இந்த கேண்டீனில் விற்கப்பட்ட சமோசாவில் மாட்டிறைச்சி, கருத்தடை சாதனம், கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் கலந்து விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக அந்த கேண்டீனுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த சமோசாக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மற்றும் மசார் ஷேக் ஆகியோரின் எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ், அந்தத் தனியார் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருந்தது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ் வழங்கிய சிற்றுண்டியில் ஒரு முறை பேண்டேஜ் இருந்ததால் இவர்களின் ஒப்பந்தத்தை, அந்தத் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸின் நிறுவனர்களான ரஹீம் ஷேக், அசோர் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், மனோகர் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை அழைத்து, சமோசாவில் கருத்தடை சாதனம், குட்கா, மாட்டிறைச்சி, புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்ட மனோகர் எண்டர்பிரைசஸின் ஊழியர்களான ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர், சமோசாவில் அந்த பொருட்களை அடைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மசார் ஷேக், ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.