அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்ல்... "இந்தியாவிற்குள்ளிருந்து தமிழக மின்சார வாரியத்திற்கு கொண்டு வரக்கூடிய நிலக்கரியில் நடந்த ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வர இருக்கிறோம். ஏற்கனவே அறப்போர் இயக்கம் நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். நிலக்கரி தட்டுப்பாடு இருக்கும் இந்த சமயத்தில் உள்ளூர் நிலக்கரி போக்குவரத்தில் எப்படி ஆயிரக்கணக்கான கோடி இழப்பு மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ளது முழுமையான ஊழல்பட்டியலை எங்கள் இயக்கம் நாளை காலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி புள்ளி விபரத்துடன் வெளியிட உள்ளோம்." என கூறியிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரியில் மாபெரும் ஊழல்.. அறப்போர் இயக்கம் வெளியிடப் போகும் புள்ளி விபர பட்டியல்
Advertisment