Landslides in sewerage works; Shocking CCTV footage

தஞ்சாவூரில் பாதாள சாக்கடை கட்டமைப்பு பணியின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில்தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

தஞ்சை விளார் சாலையில் உள்ள ஜெகநாதன் தெருவில் பாதாள சாக்கடை கட்டமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று ஜேசிபி மூலம் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தேவேந்திரன், நாராயணமூர்த்தி ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

Advertisment

தேவேந்திரன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நாராயணமூர்த்தி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தேவேந்திரன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மண் சரிவில் இரண்டு பேர் தான் சிக்கிய உள்ளதாக தெரிந்தநிலையில் தற்பொழுது மூன்றாவதாக ஒரு நபரும் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் மண் சரிவில் உள்ளே விழுந்தது தெரியவந்துள்ளது.