Landslide in Kodaikanal; The Highways Department is in the process of repairing

Advertisment

பழனியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 23 செமீ அளவு பெய்த அதி கனமழையால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு உள்ளது. இதன் அருகே சவுரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சாலை போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் விதமாக நெடுஞ்சாலைத்துறையினர் மிகத்தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் மேலே செல்லமுடியாமல் சுற்றுலா சென்று திரும்பும் பயணிகள் மலையில் இருந்து இறங்கி ஊர் திரும்ப முடியாமலும் அவதிக்கு உள்ளாவதால் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சாலையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்பொழுது கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு முன் கடந்த 22ம் தேதி 4வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.